நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. ஷமி 9.5 ஓவரில் 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன் எடுத்துள்ளது.
398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 7.4 ஓவரில் 39 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து திணறியது.
3வது விக்கெட்டுக்கு வில்லியம்சன்னுடன் ஜோடி சேர்ந்த மிட்செல் அதிரடியாக விளையாடி 134 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி தோற்கும் நிலைமை இருந்தது.
ஷமி-யின் சிறப்பான பந்துவீச்சால் மீண்ட இந்திய அணி இறுதியில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்தது.
48.5 ஓவரில் 327 ரன்களுக்கு ஆலவுட் ஆனது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஷமி 9.5 ஓவரில் 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியை தொடர்ந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள இந்திய அணி நாளை கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் வரும் ஞாயிறன்று (நவம்பர் 19) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மோத உள்ளது.