இந்தியாவின் பிரதமரை தலைவராகக் கொண்ட CSIR எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், ஃபாவிபிராவிர் (Favipiravir) மருந்தை பயன்படுத்தி கோவிட் -19 க்கு எதிரான மருத்துவ சோதனைகள் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
ஜப்பான் மற்றுன் சீனாவில் இன்ஃப்ளூயன்ஸா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பாவிபிராவிர் மருந்தை பயன்படுத்தி கொரோனாவிர்க்கு எதிரான மருத்துவ சோதனைகளை தொடங்க CSIR – இன் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மருந்து சீனாவின் ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஒரு வைரசிற்க்கு எதிரான, ஒரு தாவரத்தின் சாரில் இருந்து தயாரிக்கப்படுவது என சிஎஸ்ஐஆர் இயக்குநர் ஜெனரல் சேகர் மண்டே கூறினார். கடந்த மாதம், க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஃபாவிபிராவிர் வைரஸ் தடுப்பு மாத்திரைகளின் மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் பெற்றுள்ளது.
இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஃபாவிபிராவிரின் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்:
ஃபாவிபிராவிர் மருந்து
அவிகன் என்ற வணிகப்பெயரில் விற்கப்படும் ஃபாவிபிராவிர், ஜப்பான் மற்றும் சீனாவில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸினால் உண்டாகும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தாவரத்தின் சாறில் இருந்து பெறப்படும் ஒரு வைரஸ் தடுப்பு மருந்து ஆகும். தற்போது பல்வேறு வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, ஃபாவிபிராவிர் என்பது ஒரு சோதனையில் உள்ள வைரஸ் தடுப்பு மருந்து ஆகும். இது 2014-இல் ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க முதன்முதலில் உரிமம் பெற்றது. இன்ஃப்ளூயன்ஸாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக, நோயாளிகளுக்கு இந்த மருந்து முதல் நாள் சுமார் 1600 மி.கி என்ற அளவிலும், 2 நாளில் இருந்து 5 நாட்கள் வரை நாளொன்றுக்கு 600 மி.கி வரையும் வழங்கப்படுகிறது.
ஃபாவிபிராவிர் மருந்து COVID-19 நோயாளிகளுக்கு பயனளிக்குமா?
தற்போது பரிசோதனை செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் ஃபாவிபிராவிர் ஜப்பானில் உள்ள ஃபியூஜிபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். தற்போது இந்த மருந்தின் உபயோகம் உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதை அடுத்து, இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை பலமடங்கு உயர்ந்தது.
ஃபாவிபிராவிர் மருந்தை, COVID-19-க்கான சிகிச்சைக்காக பயன்படுத்தும் முன்கூட்டிய சோதனைகள் மிகச் சிறந்த முடிவுகளை காட்டியதாக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். ஷென்சனில் உள்ள ஒரு மருத்துவமனையினால் நடத்தப்பட்ட 80 நோயாளிகளைக் கொண்ட பரிசோதனையும், வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையில் 120 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையும் விரைவான குணமளிப்பதைக் உறுதி செய்துள்ளது. தற்போது சீன நிறுவனமான ஜெஜியாங் ஹிசுன் மருந்தக நிறுவனம் ஃபாவிபிராவிருக்கான காப்புரிமையை உரிமம் பெற்றுள்ளது.
இதன் தயாரிப்பு நிறுவனம் கூறும்போது, தற்போது நாங்கள் சீனாவில் மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபடவில்லை. ஆனால், அவிகனைப் பொறுத்தவரை, பல நாடுகளிடமிருந்து எங்களுக்கு விநியோகம செய்ய வேண்டி கோரிக்கைகள் வந்துள்ளன. அதே நேரத்தில் ஜப்பானிய அரசாங்கமும் எங்களால் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா என்று கேட்டுள்ளது. எனவே நாங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், அதற்கான முன்னேற்பாடுகளையும் ஆய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது. இதற்கான சோதனைகள் ஏற்கனவே ஜப்பானில் தொடங்கப்பட்டு விட்டன. உலகம் முழுமைக்கும், 40 பேரை பாதித்து சுமார் 3 இலட்சம் உயிர்களை பலி கொண்டு கொடூர நடைபோட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற முயற்சிகள் தேவையே.
தமிழில்: லயா