வாஷிங்டன்:
வெள்ளை மாளிகையில் பணியாற்றி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாக உள்ளது. இது வெள்ளை மாளிகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக வல்லரசான அமெரிக்காவை புரட்டிப்போட்டு வருகிறது. அங்கு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிகையும் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது.
அமெரிக்கவில் இதுவரை 13 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று  இருப்பது உறுதியான நிலையில், தற்போது  அதிபர் டிரம்பின் மகள் இவாங்காவின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் அதிபரின் வெள்ளை மாளிகையில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே வெள்ளை மாளிகை ஊ ஊழியர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது 3வது நபர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து,  வெள்ளை மாளிகையில் கொரோனா பாதிப்பு நபர்களை கண்டறியும் நடவடிக்கை  நடைபெற்று உள்ளதாகவும்,  பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளார்களா, யாருக்கேனும் வெப்பநிலை அதிகம் உள்ளதா என உறுதி செய்யவும் கூறப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.