சென்னை: சுதந்திர தின விழவை முன்னிட்டு,  தமிழக போலீசார் 21 பேர் உள்பட நாடு முழுவதும் 1090 போலீசாருக்கு வீரதீர/சேவைகளுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

2025 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகளைச் சேர்ந்த 1090 பணியாளர்களுக்கு வீரதீர/சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தாலும் தேசிய தலைநகர் டெல்லியில், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. டெல்லி  செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். இதேபோல் சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு (HG&CD) மற்றும் சீர்திருத்தப் படைகள் என மொத்தம் 1090 பணியாளர்களுக்கு வீரதீரச் செயல் மற்றும் சேவைப் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

233 பணியாளர்களுக்கு வீரதீரச் செயல் (GM) பதக்கமும், 99 பணியாளர்களுக்கு சிறப்பு சேவைக்கான ஜனாதிபதி பதக்கமும் (PSM) வழங்கப்பட்டுள்ளன, 758 பணியாளர்களுக்கு சிறப்பான சேவைக்கான பதக்கமும் (MSM)  அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில்,  தமிழக போலீசார் 21 பேருக்கு சிறந்த சேவைக்கான விருதும், 3 போலீசாருக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி விருதும்  இடம்பெற்றுள்ளது.

அதன்படி,  தகைசால் விருது ஏடிஜிபி பால நாக தேவி, ஐஜி ஜி. கார்த்திகேயன், ஐஜி எஸ். லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாராட்டத்தக்கப் பணிக்கான விருது எஸ்பி ஏ. ஜெயலட்சுமி, துணை ஆணையர் ஆர். சக்திவேல், எஸ்பி எஸ். விமலா, டிஎஸ்பி பி. துரைபாண்டியன், ஏஎஸ்பி பி. கோபாலசந்திரன், ஏஎஸ்பி கே. சுதாகர் தேவசகாயம், டிஎஸ்பி சி. சந்திரசேகர், உதவி ஆணையர் எஸ். கிறிஸ்டின் ஜெயசில், உதவி ஆணையர் எஸ். முருகராஜ், டிஎஸ்பி எம். வேல்முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஆய்வாளர்கள் பி. பொன்ராஜ், ஜே. அதிசயராஜ், பி. ரஜினிகாந்த் எம். ரஜினிகாந்த், ஆர். நந்தகுமார், பி. ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் எஸ். ஸ்ரீவித்யா, சி. அனந்தன், பி. கண்ணுசாமி, எஸ். பார்த்திபன், என். கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாராட்டத்தக்கப் பணிக்கான விருது (தீயணைப்பு துறை) தமிழக தீயணைப்புத் துறையைச் சேர்ந்த இருவர் பாராட்டத்தக்கப் பணிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் தில்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர நாள் நிகழ்ச்சியின்போது குடியரசு தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கி கெளரவிப்பார்.

மேலும் விவரங்களுக்கு

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2156243