இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளை விளையாட இருக்கிறது.

முதல் போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

ஏற்கனவே நடைபெற்ற டி20 போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் யார் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

அணி விவரம் :

ரோஹித் சர்மா – கேப்டன்
ஷிகர் தவான்
ஷ்ரேயாஸ் ஐயர்
சூர்யகுமார் யாதவ்
ரிஷப் பந்த் – விக்கெட் கீப்பர்
ஹர்திக் பாண்டியா
ரவீந்திர ஜடேஜா
முகமது ஷமி
ஜஸ்பிரித் பும்ரா
யுஸ்வேந்திர சாஹல்
பிரசித் கிருஷ்ணா