டெல்லி: நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கையில் அரசுப பள்ளிகள் 64 சதவீதமாகவும், மாணவர் சேர்க்கையில் 37 சதவீதமாகவும் இருப்பதாக மத்திய அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.

பல மாநிலங்களில், “அரசுப் பள்ளிகளை விட்டு மாணவர்கள் விலகிச் செல்லும்” “எதிர்மறை போக்கு” அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் தனியார் பள்ளி சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்தப் போக்கை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில கல்வித்துறைக்கு மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்க மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கல்வி அமைச்சகம் மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தியது. நாடு முழுவதும் உள்ள 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுன் நடத்திய கூட்டங்களில் மாணவர் சேர்க்கை குறித்த விஷயம் எழுப்பப்பட்டது. மேலும், பிரதமர்-போஷன் அல்லது மதிய உணவுத் திட்டம் குறித்து மாநிலங்களுடன் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய சமீபத்திய கூட்டங்களிலும் எழுப்பப்பட்டது.
இதில் பேசிய ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் உத்தரகாண்டில், மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி செயலாளர்கள், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகை “அதிக நிதியைச் செலவிட்டாலும், மாணவர்கள் அரசுப் பள்ளிகளை விட்டு வெளியேறி வருகின்றனர், இது கவலை தரும் போக்கு” என்று தனது கவலையை வெளிப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் உள்ள 11 மாநிலங்களில், அதிக எண்ணிக்கையிலான அரசுப் பள்ளிகள் இருந்தபோதிலும் தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பது மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை குறைவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்துடனான மத்திய கல்வி அமைச்சகத்தின் கூட்டத்தின் அறிக்கைகள், 2023-24 ஆம் ஆண்டு UDISE+ தரவைக் குறிப்பிடுகின்றன, இது மாநிலத்தில் உள்ள 61,373 பள்ளிகளில், சுமார் 73 சதவீதம் (45,000) அரசுப் பள்ளிகள் என்றும், சுமார் 25 சதவீதம் (15,232) தனியார் பள்ளிகள் என்றும் கூறுகிறது.
இருப்பினும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மொத்த சேர்க்கையில் 46 சதவீதம் ஆகும், அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை மொத்த சேர்க்கையில் 52 சதவீதத்திற்கும் சற்று அதிகமாகும், என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தெலங்கானாவில், UDISE+ 2023-24 தரவுகளைப் பயன்படுத்தி, மாநிலத்தில் உள்ள 42,901 பள்ளிகளில் 70 சதவீதம் அரசுப் பள்ளிகள் என்றும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை மொத்த சேர்க்கையில் 38.11 சதவீதம் மட்டுமே என்றும், தனியார் பள்ளிகளில் 60.75 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உத்தரகண்டில், மாநிலத்தில் உள்ள மொத்த பள்ளிகளில் கிட்டத்தட்ட 72 சதவீதம் அரசுப் பள்ளிகள் ஆகும். “இருப்பினும், அரசுப் பள்ளிகளில் மொத்த சேர்க்கை 36.68 சதவீதம் மட்டுமே, அரசு உதவி பெறாத பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 54.39 சதவீதமாகும்,” என்று அறிக்கை கூறுகிறது.
தமிழ்நாட்டில், மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கையில் அரசுப பள்ளிகள் 64 சதவீதமாகவும், மாணவர் சேர்க்கையில் 37 சதவீதமாகவும் இருப்பதாக மத்திய அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு நேர்மாறாக, அரசு உதவி பெறாத பள்ளிகள் மொத்தத்தில் 21 சதவீதமாகவும், மாணவர் சேர்க்கையில் 46 சதவீதமாகவும் உள்ளன. “இது சம்பந்தமாக, சேர்க்கையை அதிகரிக்கவும், கிடைக்கக்கூடிய வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தவும் அரசு பள்ளி என்ற முத்திரையை உருவாக்க மாநிலத்திடம் வலியுறுத்தப்பட்டது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளா மற்றும் மகாராஷ்டிராவில், 2018-19 மற்றும் கேரளாவில் 2022-23 உடன் ஒப்பிடும்போது, 2023-24 ஆம் ஆண்டில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை குறைந்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த மாநிலங்கள் “ஆதார் சரிபார்ப்பைப் பயன்படுத்தி தரவு சுத்திகரிப்பு பயிற்சியை” மேற்கொண்டதாகக் கூறியுள்ளன.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், டெல்லி, லடாக், புதுச்சேரி மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி & டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களில், அரசுப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகமாக இருப்பதாக கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது, மேலும் இது ஒரு “கவலைக்குரிய விஷயம்” என்று குறிப்பிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் சேர்க்கை குறிப்பாக ஜூனியர் வகுப்புகளில் அதிகமாக இருப்பதாகவும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைவதற்கான காரணங்களை சரிபார்க்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.