சென்னை: வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு என அடுத்தடுத்து தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்து வரும், திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 25ந்தேதி காலை 10மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்து உள்ளது.

வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் கழிவுநீர் கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, கழக அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களில் வரும் 25ந்தேதி காலை 10மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

Patrikai.com official YouTube Channel