சென்னை: தமிழ்நாட்டில் போதைப் பொருள்  நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதுதொடர்பான வழக்குகளும் அதிகரித்துள்ளன. இதன்மீது முறையான நடவடிக்கை எடுக்க தவறினால்,  அது சம்பந்தமான வழக்குகள் சிறப்பு புலனாய்வு முகமைக்கு (CBI) மாற்றி உத்தரவிடப்படும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை பெரும்பாக்கம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பான வழக்கில், அப்பகுதிகளில் போதைப் பொருள் புழக்கம் உள்ளதாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை அளித்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்பேதது வழக்கறிஞர் ஆணையம் அளிக்க  அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “போதைப்பொருளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான பிரிவு முழு அளவில் செயல்பட்டு வருகிறது. போலீசார் ரோந்து வாகனங்களில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் ஆபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  சட்ட பணிகள் ஆணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில்,   திருவள்ளூர் மாவட்ட கடப்பாக்கம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையையில்  போதைபொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்களை என்ன என்பது குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த   நீதிபதிகள், “தமிழகம் முழுவதும்  அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறினால் வழக்கை சிறப்பு புலனாய்வு முகமைக்கு (CBI) மாற்ற உத்தரவிடப்படும்” என்று எச்சரித்தனர். மேலும், “இந்த வழக்கில் போதைப்பொருளை ஒழிக்க  எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

போதை பொருள் விற்பனை அமோகம்: சென்னையில் கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்ற 334 பேர் கைது!

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை! உயர்நீதி மன்றம் அதிருப்தி…

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலின் சர்வதேச மையமாக உள்ளது தமிழ்நாடு! அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி தகவல்..