சென்னை: சென்னையில் போதைபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது, மச்சான், நண்பா என அழைத்து போதைப் பொருட்களை ருசி பார்க்க வைக்கும் நபர்களிடம் உஷாராக இருங்கள் என தாம்பரம் மாநகர காவல்துறை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி கூறினார்.
மாநில காவல்துறை அதிகாரியே சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றத. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய தாம்பரம் மாநகர துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஐபிஎஸ் , விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
பின்னர்நிகழ்ச்சியில் உரையாற்றியவர், ”மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போதும் சரி, வெளியே வேறு எங்கும் செல்லும்போது சரி கட்டாயம் ஹெட்மட் அணிய வேண்டும். ஹெட்மெட் அணிவது காவல் துறை அபாரத்திற்கு பயந்து அணியாமல் நமது உயிரை மதித்து கட்டாயம் அணிய வேண்டும். அதேபோல் கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து போதைப் பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசியவர், சென்னையில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது என்றவர், மாணவர்களிடையே போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது என்றார். அதனால் மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியவர், நம்முடன் படிக்கும் நண்பர்களே நம்மை போதைக்கு அடிமையாக்கும் வகையில் மச்சான், நண்பா ஒரு முறை எனக்காக கொஞ்சம் சாப்பிட்டு பார் என ஆசை வார்த்தை கூறி நம்மை போதைக்கு அடிமையாக்கி விடுவார்.
அப்படி போன்றவர்களிடம், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றவர், போதை பொருள் ருசி பார்த்தால், தொடர்ந்து, போதைப் பொருட்ளை அருந்தவே திருடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவோம். தொடர்ச்சியாய் பல குற்றங்களுக்கும் இந்த போதைப் பொருள் அருந்துவது காரணமாக அமையும். எனவே யார் சொன்னாலும் போதைப்பொருட்களை ஒரு முறை டேஸ்ட் பார்கலாம் கூட எண்ணாதீர்கள் என அறிவுரை வழங்கினார்.