டெல்லி: வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் அக்டோபர் வரை மேலும் 2 மாதம் நீட்டிப்பு செய்து வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டத்தின் மூலம் அபராதமின்றி வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை கால அவகாசமும், அபராததுடன் தாக்கல் செய்ய அக்டோபர் 31வரை அவகாசம் வழங்கியுள்ளது.
நேரடி வரி தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் வகையில் ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் கட்டணம் செலுத்துவதற் கான தேதி, செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வட்டித் தொகையுடன் சோ்த்து அக்டோபா் 31-க்குள் கட்டணம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதுபோல, ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்வதற்கான கெடு, ஜூலை 31-ல் இருந்து நவம்பா் 30-ஆம் தேதி வரையிலும், தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கெடு அக்டோபா் 31-ல் இருந்து டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத் தில் ஜிஎஸ்டி வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவா்களுக்கு சலுகை அளிக்க ஜிஎஸ்டி கவுன் சில், கடந்த மே மாதம் முடிவு செய்தது. அதன்படி, குறைக்கப்பட்ட தாமதக் கட்டணத் தை மத்திய நிதியமைச்சகம் ஜூன் 1-ஆம் தேதி அறிவித்தது. இந்தக் கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது, தாமதக் கட்டணம் செலுத்த கடைசி தேதி நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.