கடலூர்: தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர் ஜெயப்பிரியா என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கர் கடலூர் உள்பட பல பகுதிகளில் ஜெயப்பிரியா என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் பள்ளிகள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின்மீது வரிஏய்ப்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக, இன்று காலை ஜெய்சங்கரின் ஜெயப்பிரியா நிறுவனத்திற்கு சொந்தமான கடலூர், நெய்வேலி, வடலூர், விருத்தாசலம், வேப்பூர், பண்ருட்டி பகுதிகளில் உள்ள பள்ளிகள், திரையரங்குகள், தங்கும் விடுதிகள், அலுவலகங்கள் என 10 க்கும் மேற்பட்ட இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 80 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் பல பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.