பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களுரில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டில் கோடிக்கணக்கான பணம் சிக்கியது.
பெங்களூரு நகரில் நேற்று நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது, மொத்தம் ரூ.4 கோடி மதிப்பு உள்ள புதிய ரூ.500 மற்றும் ரூ. 2000 நோட்டு கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் இருந்து 7 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பெங்களூரில் நேற்று முன் தினம் முதல் பல்வேறு பல்வேறு உயர் அதிகாரிகள் வீடுகளிலும், ஐஏஎஸ் அதிகாரி களின் வீடுகளிலும் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில், கர்நாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையாவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் வீட்டிலும்கூட சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி மோகன் சக்கரவர்த்தி, தனலட்சுமி வங்கியின் மேலாளர் உமா சங்கர், காவிரி வாரிய தலைமை இன்ஜினியர் சிக்கராயப்பா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனைகள் நடந்துள்ளன. இதில் சிக்கராயப்பா முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றும் பல அதிகாரிகள் வீட்டில் சோதனை நடைபெற்றது. இதில் அரசு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் இரு பொறியாளகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, மொத்தம் ரூ.4 கோடி பணம் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
சோதனையின் போது அவர்களது வீடுகளில் இருந்து 7 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வும் வருமான வரித்துறையினர் கூறினர்.
ஆனால், வருமான வரித்துறை கைப்பற்றியுள்ள பணம் மற்றும் தங்கம் பற்றிய முழு விவரம் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதுபோல் எந்த அதிகாரி வீட்டில் கைப்பற்றப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கவில்லை.
இதே போல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, ஈரோடு உள்பட நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது மேங்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பெங்களூருவில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகளால் கர்நாடக முதல்வர் உள்பட அதிகாரிகள் மட்டத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை நடைபெற்ற அதிரடி சோதனையில் பெங்களூருவில் கைப்பற்றப்பட்டதே அதிக அளவு என்றும், கடந்த 8ந்தேதிக்கு பிறகு புதிய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை என அதிகாரிகள் கூறி யுள்ளனர்.
பொதுமக்கள் ஒன்று அல்லது இரண்டு புதிய நோட்டுக்களை கூட வாங்க முடியாமல் வங்கி வாசல்களில் காலை முதல் மாலை வரையும், ஏடிஎம் இயந்திரத்தில் எப்போது பணம் போடுவார்கள் என தவித்து வருகின்றனர்.
ஆனால், அரசு அதிகாரிகளும், பண முதலைகளும், அரசியல்வாதிகளும் வங்கி மேலாளர்களுடன் இணைந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது பொதுமக்களை மேலும் ஆத்திரமூட்டுவதாக உள்ளது….