சென்னை: இசை அமைத்ததற்காக ரூ.3 கோடியே 47 லட்சம் சம்பளத்தை  தனது அறக்கட்டளைக்குச் செலுத்தக் கோரியது தொடர்பாக பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரிங்டோன் இசையமைத்துக் கொடுப்பது தொடர்பாக கடந்தஆண்டு ஒப்பந்தம் போட்டார். இதற்க ஊதியமாக அவருக்கு  3 கோடியே 47 லட்சம்  பேசப்பட்டது. இந்த ஊதியத்தை, தனது ஏ.ஆர்.ஆர். அறக்கட்டளைக்கு நேரடியாக செலுத்தும்படி, லிப்ரா நிறுவனத்திடம் ஏ.ஆர். ரகுமான் கூறியுள்ளார்.

அறக்கட்டளைக்கு செலுத்த கூறியதன்மூலம், வருமான வரி செலுத்துவதை தவிர்க்க ஏ.ஆர்.ரகுமான் இந்த முயற்சியில் இறங்கியதாக கூறி வருமான வரித்துறை குற்றச்சாட்டியது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் தரப்பு விளக்கத்தை ஏற்று முதன்மை ஆணையர் விசாரணையை கைவிட்டார். இந்த உத்தரவை வருமான வரித்துறையின் மேல்முறை யீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்து கடந்த ஆண்டு ( 2019) செப்டம்பர் மாதம்  உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்,  சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  வருமான வரித்துறையினரின்  மனுவுக்கு பதிலளிக்கும்படி ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தது.

[youtube-feed feed=1]