சென்னை: சென்னையில் உள்ள பிரபல மொபைல் விற்பனை நிறுவனமான  பூர்விகா மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் நிறுவனம் மற்றும் நிறுவன முதலாளி வீட்டில்  வருமான வரி அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.

பூர்விகா மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தியாவின் முன்னணி மொபைல் சில்லறை விற்பனையாளராகத் திகழ்கிறது, அதன் சிறகுகள் தென்னிந்தியாவில் பரந்து விரிந்துள்ளன,  இந்த நிறுவன கடைகளான  பூர்விகா மொபைல் விற்பனை கடைகளில்  உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்டுகளின் மொபைல் போன்கள் & டேப்லெட்டுகள், மொபைல் பாகங்கள், டேட்டா கார்டுகள், இயர்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிறுவனத்த்தின் சிந்தாமே, ‘மொபைலை சிந்தியுங்கள், பூர்விகாவை சிந்தியுங்கள்’ என்று கூறி, மக்களை கவர்ந்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு  தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் கிளைகள் உள்ளது.

பூர்விகா மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் சென்னையில் தலைமையகம் உள்ளது. மொபைல் விற்பனையைத் தவிர, இந்த முன்னணி மல்டி-பிராண்ட் சில்லறைச் சங்கிலி கேஜெட் பயனர்களுக்கான சேவைகளையும் விரிவுபடுத்துகிறது. பூர்விகா மொபைல்ஸ், உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்ட் மொபைல் போன்களை கேஜெட்டுகள் மற்றும் துணைக்கருவிகளுடன் அதன் சலுகைகளை மலிவு விலையில், அற்புதமான தரம் மற்றும் நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகளில் வழங்குகிறது.

இந்நிறுவனம் வரி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து வருமான வரித்துறையில், அந்நிறுவன அதிபர் வீடு மற்றும் பல கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். “பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் யுவராஜ் வீடு கோடம்பாக்கம் யுனைடெட் காலனியில் இருந்து வருகிறது. அங்கு இன்று அதிகாலை 7 மணி அளவில் எசென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வேளச்சேரி உள்பட பல இடங்களில் உள்ள பூர்விகா மொபைல் ஷோருமிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.