டில்லி
வருமான வரித்துறை நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நேற்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித் வல்லுநர்களை சரியான நேரத்தில் கணக்குகளை அளித்தமைக்காக பாராட்டி உள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில் வெளியாகி உள்ள சில சிறப்பம்சங்கள் வருமாறு:
2023 ஜூலை 31, 2023 வரை 2023-24 ஆம் ஆண்டிற்கான 6.77 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளை விட 16.1% அதிகம்.
ஒரே நாளில் அதாவது 31 ஜூலை 2023 அன்று 64.33 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 53.67 லட்சம் கனக்குகள் முதல் முறையாகத் தாக்கல் செய்பவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இது வரி அடிப்படையை விரிவுபடுத்துவதற்கான நியாயமான அறிகுறியாகும்.
5.63 கோடி வருமான கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. சரிபார்க்கப்பட்ட கணக்குகளீல், 3.44 கோடி கணக்குகள் ஜூலை 31, 2023க்குள் அளிக்கப்பட்டுள்ளன.
மின்னணு முறையில் (01.07.23 முதல் 31.07.23 வரை) 32 கோடிக்கும் அதிகமான கணக்குகளும். ஜூலை 31 அன்று 2.74 கோடி கணக்குகளும் பதியப்பட்டுள்ளன.
இதில் ஜூலை மாதத்தில் மட்டும் TIN 2.0 கட்டண முறை மூலம் 1.26 கோடிக்கும் அதிகமான சலான்கள் பெறப்பட்டுள்ளன.
மின்னணு உதவி மையத்தில் ஜூலை மாதத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.’
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.