சென்னை: வரி ஏய்ப்பு முறைகேடு தொடர்பாக ஆம்பூரில் ஃபரிதா குழுமம், கே.எச். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்W வருகிறது.
இந்தியாவின் பிலபலமான தோல் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்று, ஆம்பூரில் ஃபரிதா குழுமம் மற்றும் அவர்களது உறவினரின் கே.எச்.தோல்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள். இந்த நிறுவனங்களில் தயாரிக்க்ப்படும் தோல், மேல் மற்றும் ஷூ உற்பத்தி அலகுகள் உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரபலமான பிராண்ட் பெயர்களில் விற்கப்படுகின்றன.
இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி வருமான வரித்துறையினர் கடந்த 23ந்தேதி அதிரடி சோதனையில் இறங்கினார். இந்த நிறுவனங்களுக்கு சொந்மான இடங்கள், தமிழ்நாடு உள்பட வெளி மாநிலம் என 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று சுமார் 10 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்தில் நடைபெற சோதனையில் பதிவேடுகள், கணக்கு விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். வேலூர் மாவட்டம் பெருமுகையில் இயங்கி வரும் கே.எச். ஷூ கம்பெனி யிலும், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் உள்ள கே.எச். குழுமத்திற்கு சொந்தமான 2 தோல் தொழிற்சாலைகள், பைபாஸ் சாலையில் உள்ள தோல் தொழிற்சாலை மற்றும் உறவினர்களின் 10 வீடுகள் என மொத்தம் 13 இடங்களில் 150 அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள், பணம், நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான 10க்கும் ஆலைகளில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.