டெல்லி:

தன்னிச்சை அதிகாரத்தை குறைக்கும் வகையில் கள பணியாளர்கள் சம்மன், நோட்டீஸ், சிறப்பு தணிக்கை போன்றவற்றை டிஜிட்டல் ஆவணங்களாக பராமரிக்க வருமான வரித் துறை உத்தரவிட் டுள்ளது.


வருமான வரி தொழில் பயன்பாட்டு மென்பொருள் என்ற புதிய மதிப்பீட்டு தொகுப்பு மூலம் வழக்கமான பணிகளை டிஜிட்டல் மயமாக்க வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஆன்லைன் டிஜிட்டல் பதிவேடுகள் உருவாக்கப்படுகிறது. உத்தரவு பிறப்பித்தல், அனுமதிக்கான தேவைகள், விசாரணை, வரி செலுத்துவோரின் மனுக்கள் போன்றவை இந்த திட்டத்தில் சேர்க்கப்படுகிறது.

இதன் மூலம் வரி செலுத்தும் நபரின் விபரம், நேரம், தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்படும். இதன் பின்னர் இந்த விபர ஆவணங்கள், வரி செலுத்துபவரின் பட்டியல், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை பதிவுகளாக வைத்துக் கொள்ள முடியும்.
இது போன்று பல அலுவலக நடைமுறைகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுகிறது. ‘‘வருமான வரித் துறையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை டிஜிட்டல் மற்றும் தரமான செயல்பாட்டுக்கு சான்றாக அமையும்.

அனைத்து நடைமுறைகளும் டிஜிட்டல் முறையில் கைவசம் இருக்கும். தானியங்கி செயல்பாடுகள், வெளிப்படையான செயல்பாடுகள் வரி நிர்வாகத்தில் ஏற்படும். இதன் மூலம் தன்னிச்சை அதிகாரம் குறைக்கப்ப்டடு, இ.நிர்வாகம் ஊக்குவிக்கப்படும்’’ என்று நாங்கிய மற்றும் இணை இயக்குனர் ( நேரடி வரி வதிப்பு) சைலேஷ் குமார் தெரிவித்தார்.