டில்லி
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கிராஜுவிட்டிக்கான (பணிக்கொடை) உச்சவரம்பு ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் மே மாதத்துடன் தற்போதைய அரசின் ஆயுட்காலம் முடிவடிவதால் பாஜக அரசு இந்த காலகட்டத்துக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தேர்தல் வர உள்ளதால் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பல நலத் திட்டங்களும் வரித் தள்ளுபடிகளும் இருக்கலாம் என மக்கள் எதிர்பார்த்தனர்.
அதற்கேற்றபடி வருமானவரி வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கிராஜுவிட்டிக்கான வருமான உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.