‘சபரிமலை முதல்  சாய்பாபா வரை  வறட்சி.. வறட்சி..

ஊரடங்கு சாதாரண மனிதர்களை மட்டுமின்றி, சாமிகளையும் ரொம்பவே ’ வறட்சி’யில் தள்ளிவிட்டது.

திருப்பதி கோயிலுக்கு மாதம் 200 கோடி ரூபாய் வருமானம் வந்தது. இப்போது, பூஜ்யம்.

சபரிமலை அய்யப்பன் கோயில் 2 மாதங்களாக மூடிக்கிடக்கிறது.

இதனால் 100 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு மாதம் 5 கோடி ரூபாய் வருமானம் வந்தது.

இப்போது, வெறும் ஒன்றரை லட்சம் ரூபாயாக வருமானம் குறைந்து விட்டது.

அந்த கோயில் வங்கியில் டெபாசிட் செய்துள்ள நிரந்தர கணக்கில் இருந்து வரும்  வட்டி பணத்தின் மூலம் தான் அன்றாட செலவுகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது.

 மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு மாதா மாதம் 22 கோடி ரூபாய் சுளையாய் வருமானம் கொட்டியது.

இப்போது நயா பைசா வருமானம் இல்லை.

அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் பாக்கி.

எல்லா சாமிகளும் கோவில் செலவுகளைச் சமாளிக்க இப்போது பக்தர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்பதே உண்மை..

– ஏழுமலை வெங்கடேசன்