க்னோ

. பி. ரேபரேலியில் வசிக்கும் ஒரு பெண் மீது நான்கு முறை ஆசிட் வீசப்பட்டுள்ளது.   அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் என்பது கூடுதல் தகவல் ஆகும்

மேலே குறிப்பிட்டுள்ள பெண்ணுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.  அவர் 2008 ஆம் ஆண்டு இருவரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.  அந்த இருவரையும் போலீஸ் கைது செய்தது.  வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.   அந்த பெண் மீது அந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் 2011 மற்றும் 2013ஆம் வருடங்களில் ஆசிட் வீச்சு நடைபெற்றது,   மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகைச்சை அளித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ரெயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மீது மீண்டும் வேறு சிலரால் ஆசிட் வீசப்பட்டது.  அந்தப் பெண்ணுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.  தன் மீது ஆசிட் வீசியவர்களை அந்தப் பெண் அடையாளம் காட்ட, அவர்களைக் கைது செய்து அந்த வழக்கு தனியாக நடை பெறுகிறது.   அந்தப் பெண்ணை உ. பி. முதல்வர் யோகி சந்தித்து ஆறுதல் அளித்து,  அரசு சார்பில் இழப்பீடு வழங்கினார்.

தற்போது அந்தப் பெண் லக்னோ அலிகன்ச் பகுதியில் வேலை பார்த்து வருகிறார்.   ஒரு விடுதியில் தங்கி உள்ளார்.  மாலை 6 மணிக்கு விடுதிக்கு வெளியில் உள்ள குழாயில் நீர் பிடிக்க வந்தார்.  அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண்ணின் மேல் ஆசிட் வீசினார்

வலது பக்கத்தில் காயத்துடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  போலிசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.   இதுவரை குற்றவாளியைப் பற்றிய சரியான தகவல் கிடைக்கவில்லை.