
பதோஹி (உ.பி.)
உத்தரப்பிரதேசம் பதோஹி அருகில் குடிபோதையில் நடந்த சண்டையில் ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்.
பா ஜ க ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹி பகுதியில் வசிப்பவர் புத்திராம் (வயது 32). நேற்று இரவு அங்குள்ள ஒரு மதுபானக் கடையில் புத்திராம் மது அருந்தி இருக்கிறார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நான்கு பேர்களுடன் இவருக்கு வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நால்வரும் புத்திராம் மீது பக்கத்தில் குவிக்கப்பட்டுள்ள செங்கற்களை எடுத்து வீசி உள்ளனர்.
கற்கள் வீசப்பட்டதால் காயமுற்ற புத்திராம் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து பயந்து போய் அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். புத்திராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
[youtube-feed feed=1]