சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை பட்டியலை அறிவித்து வரும் நிலையில், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபாவும் தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

தேர்தல் நேரங்களில்போது மக்களிடையே  தலைகாட்டி வரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளும்,  எம்.ஜி.ஆர்  அம்மா தீபா பேரவையின் தலைவருமான  தீபா நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தார்.

தேர்தலில் போட்டி தொடர்பாக அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றதாவும் தெரிவித்தவர், அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.  அ.தி.மு.க, டி.டி.வி எங்கள் பேரவை என அனைத்திலும் சேர்த்து ஒன்றரை கோடி தொண்டர்கள்  இருப்பதாக தெரிவித்தவர், தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தொண்டர்களிடம் விருப்ப மனு பெற இருப்பதாக கூறினார்.

எங்களின்  கூட்டணிக் கதவுகள் பெரும்பான்மையாக மூடப்பட்டுவிட்டது, இருந்தாலும்  யாரேனும் எங்களை அழைத்தால் அவர்களை கூட்டணியில் சேர்ப்பது குறித்து  ஆலோசிப்போம் என்று கூறினார்.

தங்களை கூட்டணியில் சேர அதிமுக, திமுக அழுத்தம் கொடுத்ததாக கூறியதவர், நாங்கள் அதற்கு அடி பணியாமல் தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றும் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலிலும் நான் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை என்றவர், அனைத்து தொகுதியிலும்   வேட்பாளர் தேர்வு நடத்தப்படும் என்றும், எந்தத் தொகுதியில் சிறப்பாக செயல்படமுடியுமோ அங்கு போட்டியிடுவோம்.

இவ்வாறு தீபா  கூறினார்.