சென்னை: தமிழ்நாட்டின் வரி வருவாய் 52.3% அதிகரித்துள்ள என்று கூறிய நிதியமைச்சர் பிடிஆர், அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 7-வது மாநாடு சென்னையில்  நடை பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக நிதியமைச்சர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டிடைஇந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநர் சாந்திலால் ஜெயின், மாநாட்டை தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘வங்கிகளை காப்போம், தேசத்தை காப்போம்’ என்ற முழக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. வங்கிகள் தனியார்மயமாக்கல் என்பது இன்றைக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. எனினும், இந்தியாவில் இன்றைக்கு வங்கிகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. இந்தியன் வங்கி ரூ.10 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது’’ என்றார்.

மாநாட்டில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரை ஆற்றினார். அப்போது,  நாட்டில் அனைவரிடமும் பணப் பரிவர்த்தனை நடைபெறுவதற்கு வங்கிகள் மையமாக இருந்து செயல்படுகின்றன. இன்றைக்கு தொழில்நுட்பம் என்பது மிகவும்அத்தியாவசியமாக உள்ளது. எனவே, வங்கிகள் தங்களது தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையும் என்றார்.

இந்த மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். போதிய அளவு ஊழியர்களை நியமிக்க வேண்டும். பெண் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் முரளி சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் சவுமியா தத்தா, இந்தியன் வங்கி செயல் இயக்குநர்கள் இம்ரான் அமின் சித்திக், அஷ்வனி குமார், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு) தலைவர் எஸ்.மோகன் ராஜ், அகில இந்திய இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் ராம்நாத் சுக்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாடு முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிடிஆர், தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தினால் வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையும் என்று கூறியவர்,  வங்கிகள் தங்களது தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையும்.

தமிழ்நாட்டில், 2022 ஏப்ரல் மாதம் முதல் முன் வரையிலான முதல் காலாண்டில் தமிழ்நாட்டின் வரி வருவாய் 52.3% அதிகரித்துள்ளது என தெரிவித்தவர், கடந்த ஆண்டு (2021) இதே காலாண்டில் ரூ.22,260 கோடியாக இருந்த வரி வருவாய் இந்த ஆண்டு ரூ.33,923 கோடியாக அதிகரித்தது. இதே நிலை நீடித்தால்,  அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.