
தமிழகத்தில் வாக்காளர் பட்டியர் சீர்திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) நவம்பர் 4ந் தேதி முதல் டிசம்பர் 4ந்தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசு அலுவலகர்கள் வீடு வீடாக சென்று எஸ்ஐஆர் பாரங்களை கொடுத்து, அதை பூர்த்தி செய்ய அறிவுறுத்தினர். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட பாரங்களை வீடு வீடாக சென்று பெற்றனர். இதற்காக வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்களும் போடப்பட்டது. பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. SIR பணிகளில் தேர்தல் ஆணையம் சார்பில் 83 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இடையில், மழை, வெள்ளம் காரணமாக எஸ்ஐஆர் படிவங்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டதால், அதற்கான கால அவகாசம் டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர், பதிவேற்றம் செய்வதில் இளையதளத்தால் சில சிரமங்கள் ஏற்பட்டதால், மேலும் 3 நாள் அவகாசம் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 14ந்தேதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் படிவ விநியோகப் பணி 100% முடிந்து விட்டதாகவும், அதாவது, மொத்தம் 6.41 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவங்கள் பெறப்பட்டு, அதை பதிவேற்றும் பணியும் 100% முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாதம் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
[youtube-feed feed=1]