தமிழ் வம்சாவளியை சேர்ந்த ஓர் இளம் பெண் ஜாஸ்மின் டி, தனக்கு ஒரு கட்டாய திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முயற்சித்தபோது அவருக்குப் பெர்ன் நகர அதிகாரிகள் ஆதரவு கிடைத்துள்ளது. சிறார் திருமணம்குறித்த புகார்கள் அதிகரித்து வரும்நிலையில், பெர்ன் நகர அதிகாரிகளின் அணுகுமுறை ஒரு முன்மாதிரியாக உள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டு தலைநகரமான பெர்ன் நகரில் வசித்து வந்த ஜாஸ்மின் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார். இதனை அறிந்த அவரின் தந்தை, இந்தியாவில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து அவரையே திருமணம் செய்யும் படி வற்புறுத்தினார். முன்பின் தெரியாத ஒருவரை திருமணம் செய்யத் தந்தை மிரட்டியதை தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேற ஜாஸ்மின் முடிவுசெய்தார். தான் பருவமடைந்த்து முதலே தன் தந்தை தன்னை கட்டுப்படுத்தி வந்ததால், ஜாஸ்மின் பெர்ன் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார்.
ஜாஸ்மின் போன்றே சுவிச்சர்லாந்தில் உள்ள பல பெண்களும் இந்தப் பிரச்சனையை அனுபவித்துள்ளனர்.
சுவிச்சர்லாந்தில் கட்டாய மணமுடித்தலை நாட்டை விட்டு அகற்ற அந்நாடு முழுவதும் சேவையாற்றிவரும் “ கட்டாய திருமணத்திற்கெதிரான மையம்” எனும் சுவிஸ் அமைப்பு, 2005ம் ஆண்டு முதல் 2016 இறுதி வரை சுமார் 1,702 கட்டாயமாகத் திருமணப் புகார்களைக் கையாண்டுள்ளது.
தங்கள் அமைப்பை, 2005 மற்றும் 2015 இடையில் வெறும் ஐந்து 16 வயதுக்குட்பட்ட 51 குழந்தைகள் தங்களை நாடினர். ஆனால், கடந்த 2016 ஆண்டில் மட்டும் 16 வயதுக்குட்பட்ட 51 குழந்தைகள் தங்களிடம் ஆலோசனை கேட்டனர்.
மையத்தின் தலைவரான அனு சிவகணேசன் கூறுகையில், “ மக்களிடம் அதிகரித்துள்ள விழிப்புணர்வு தான், தங்களை ஆலோசனைக்காக நாடுவோரின் எண்னிக்கை உயர்வுவுக்கு முக்கிய காரணம்” என்றார். நாங்கள் பள்ளிகளுக்குச் சென்று மாணவிகளிடம் நேரிடையாக விழிப்பணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது மிகுந்த பயனளித்துள்ளதாக்க் கூறினார்.
இள வயதில் கட்டாயத் திருமணம்குறித்த ஆலோசனை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்விற்கு காரணம், கடந்த சில ஆண்டுகளாக, சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், எரித்திரியா, சோமாலியா போன்ற நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாய் குடியேறும் மக்களின் வருகையால் இருக்கக்கூடும் எனக் கூறினார்.
எங்களிடம் வரும் 91% புகார்கள் சுவிச்சர்லாந்தில் குடிபெயர்ந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறை மக்களின் கட்டாயத் திருமணம் ஆகும்.
குறைந்தபட்ச திருமண வயது சட்டங்களை மக்கள் புறக்கணிக்க (சுவிச்சர்லாந்து உள்ள 18) மற்றொரு காரணி, மத அல்லது சடங்குத் திருமணங்கள் அதிகரித்த்தாகும்,
சுவிஸ் சட்டப்படி ஒரு சிவில் திருமணத்திற்கு முன் எந்த மத திருமண விழாவிற்கு அனுமதி இல்லை. ஆனால் சில அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெளிவு இல்லை.
2013ல் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம், சுவிச்சர்லாந்தில் கட்டாயத் திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே சுவிஸ் பதிவாளர்கள் கட்டாயத் திருமணங்களை அதிகாரபூர்வமாக மறுக்க வேண்டும் . மேலும், அத்தகைய நிகழ்வுகள்குறித்து நீதித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
பெர்ன் வழக்கு மேலாண்மை மாதிரி , பல்வேறு தரப்பினரை உறுப்பினராய் கொண்ட்து. அவர்கள், வருடந்தோறும் வட்டமேசை மாநாடு நடத்தி எவ்வாறு கட்டாயத் திருமணங்கள் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆலோசனகள் நடத்தி வழிமுறைகளை வகுப்பர்.
சில இடங்களில், தவறான மதிப்பீடு அல்லது கருத்தின் காரணமாகச் சில தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, தீர விசாரித்துக் கட்டாயத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று அனு சிவகணேசன் கூறினார்.
இந்தியாவில் என்ன நிலைமை ?
நமது இந்தியக் கலாச்சாரத்தில், கட்டாயத் திருமணங்கள் தான் பெரும்பாலும் நடை பெற்று வருகின்றன.
இந்திய உரிமையியல் சட்டம் சிக்கல் நிறைந்தவையாக அமைந்துள்ளன. இந்தியா பல சமயத்தினரை உள்ளடக்கியதால் ஒவ்வொரு மதத்தினரும் அதற்குறியத் தனித்தன்மையை வலியுறித்துவதால் இச்சிக்கல் நிறைந்த சட்டமாக உள்ளது.
பல மாநிலங்களில் திருமணங்களைப் பதிவு செய்வது, மற்றும் மணமுறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை. ஆகையால் ஒவ்வொரு சமயத்தினருக்கும் தனித்தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்து, இசுலாமியர், மற்றும் என்று தனித்தனியாகச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அவைகள் முறையே இந்து, இசுலாமியர், கிறித்தவர் மற்றும் இம்மூன்று மதங்களில் இருந்தும் மற்ற மதங்களில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர்களுக்கு (காதலர்களுக்கு) சிறப்பு திருமண சட்டம் ஆகிய நான்கு மட்டுமேதான்.
• “சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என அழைக்கப்பட்ட, இராஜா ராம்மோகன்ராய் 1828ம் ஆண்டில் உருவாக்கிய பிரம்ம சமாஜம் என்ற அமைப்பின் வாயிலாக, குழந்தைத் திருமண முறையை எதிர்த்தல், பெண் கல்வி, விதவை மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் மற்றும் பெண் விடுதலையை ஆதரித்தல், பலதார மணம் மற்றும் பர்தா முறையை ஒழித்தல் போன்ற சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். மேலும் தனது சிறு வயதில், தம்மிடம் மிகுந்த அன்பு செலுத்திய தனது மூத்த சகோதரனின் மனைவி, அவரது கணவனின் மறைவுக்குப் பிறகு உறவினர்களால், வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றிக் கொலை செய்யப்பட்டதைக் கண்டதால் மிகவும் மனமொடிந்து போனார். இக்கொடிய நிகழ்வினை ஒழிக்கவேண்டி அவர் தொடர்ந்து பணியாற்றியதன் விளைவாகவே, 1829ம் ஆண்டில் வில்லியம்பெண்டிங் பிரபுவால், ‘‘சதி எனும் உடன்கட்டை ஏறுதல் முறை ஒழிப்புச்சட்டம்’’ இயற்றப்பட்டது.
• இவரைத் தொடர்ந்து பொறுப்புக்கு வந்த, கேசவ சந்திர சென்னின் முயற்சியால் 1872ம் ஆண்டு, “சிறப்புத் திருமண சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் சாதி மறுப்புத் திருமணம் மற்றும் விதவை மறுமணம் போன்ற சமூக சீர்திருத்த நிகழ்வுகளை ஆதரித்தது. மேலும் அச்சட்டத்தின்படி, குழந்தைத் திருமணமும், பலதார மணமும் ஒழிக்கப்பட்டது.
• சட்டங்கள் பல இயற்றப்பட்டாலும், சமூகத்தில் குழந்தைத் திருமண முறையானது தொடர்ந்து நீடிக்கவே செய்தது.
• 1929ம் ஆண்டு, “குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி, முதல் முறையாகப் பெண்ணின் திருமண வயது 14 என்று வரையறை செய்யப்பட்டது. இச்சட்டத்தில் 1940ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 15 என்றும், 1978ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் வாயிலாக, பெண்ணின் திருமண வயது 18 என்றும் உயர்த்தப்பட்டது. 18க்கும் குறைவான வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கும் பெற்றோர்கள் மற்றும் அதற்குத் துணைபுரியும் உறவினர்கள், இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
• மீண்டும், 2006ஆம் ஆண்டில், “குழந்தைத் திருமண தடைச் சட்டம்” கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 என்று உறுதி செய்யப்பட்டது. ஒருவேளை குழந்தைத் திருமணம் ஏற்கனவே நடந்திருந்தால், திருமணமான பெண் தனது 18 வயதை அடைந்ததிலிருந்து 2 ஆண்டுகளுக்குள், அந்த திருமணம்குறித்து நீதிமன்றத்தில் மனு செய்தால், அந்தத் திருமணமானது செல்லாது என்று நீதிமன்றம் அறிவிப்பு செய்யும். ஏற்கனவே நடந்த திருமணத்தின் வாயிலாகக் குழந்தை ஏதேனும் பிறந்திருந்தால், அந்த குழந்தைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005ல் கூறப்பட்டுள்ளது போல, தேவையின் பொருட்டு அந்தப் பெண்ணிற்கு அவரது கணவன் அல்லது பெற்றோர் பராமரிப்புத் தொகையும், ஊக்கத்தொகையும் மற்றும் தேவையினைப் பொருத்து குடியிறுப்பு வசதியும் ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் :
தமிழக சமூகநலத்துறை மூலம், பள்ளிகளில், மாணவிகளுக்குத் திருமண வயது, பாலியல் வன்முறைகுறித்து மத்திய அரசின் நிதியுதவியுடன் விழிப்புணர்வு வகுப்புகள் அரசுப் பள்ளிகளில் நடத்தப் பட்டு வருகின்றன. படிக்கும்போது, 18 வயதிற்கு முன்னதாகத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டால், தாசில்தார் உதவியுடன் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது. ஆனாலும், பெர்ன் மாடல் போன்று பெண்களுக்கு திருமணஆலோசனை மையங்கள் திறக்கப் பட்டால் மிகுந்த பயனளிக்கும்.