பாதிரியாரிடம் சிக்கிய உலகின் மிகப்பெரிய வைரம்!

Must read

ப்ரீடவுன்,

706 காரட் எடை கொண்ட மிகப் பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான சியார லியோனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மதப்பாதிரியார் ஒருவர் இந்த அரிய வைரத்தைத் தோண்டி எடுத்துள்ளார். உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களிலேயே மிகப்பெரியது இதுவாகும்.

தற்போது வைரம் சியரா லியோன் அதிபர் எர்னெஸ்டிடம் ஒப்படைக்கப்பட்டது.  வைரத்தைப் பாதுகாப்பாக நாட்டுக்கு வழங்கியதற்காக அதிபர் எர்னெஸ்ட், பாதிரியாருக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

வைரத்தை வெளிப்படையாக ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்தப் போவதாக அதிபர் உறுதியளித்துள்ளார். வைரங்களுக்காக அந்நாட்டில் பல ஆண்டுகள் உள்நாட்டு யுத்தம் நடந்துள்ளது.

கடந்த 2002 ம் வரை நடந்த கலவரங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆப்ரிக்க சுரங்கத்தில் கிடைத்த 10 ஆவது மிகப்பெரிய வைரம் என கருதப்படுகிறது.

More articles

Latest article