மும்பை:

னியார் மகப்பேரு மருத்துமனை ஒன்றின் அருகில் ஒரே குழியில்  19 சிதைக்கப்பட்ட கருக்கள் கண்டுபிடிக்கப்பட்டது மகராஷ்டிர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகராஷ்டிர மாநிலத்தில் சாங்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில்,  சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பில் ஒரு பெண் உயிரிழந்ததாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி புகார் எழுந்தது. இது குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

மருத்துவமனைக்கு அருகில் சிதைக்கப்பட்ட கருவை போலீசார் தேடினர். அப்போது ஒரு குழியை தோண்டியபோது, அதில் சிதைக்கப்பட்ட நிலையில் 19 பெண் சிசுக்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“பெண் சிசுவைக் கலைப்பது சட்டப்படி தவறு. ஆகவே மரணமடைந்த பெண்ணின்  கணவரை கைது செய்திருக்கிறோம், கருக்கலைப்பு செய்த மருத்துவர தலைமறைவாகிவிட்டார். அழரை தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று சாங்லி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தத்தாத்ராய் ஷிண்டே தெரிவித்தார்.

இதே போன்ற சம்பவங்கள்  தொடர்ந்து நடந்தவருகின்றன.

 

2012 ஆம் ஆண்டு, மத்தியப்பிரதேசம் இந்தூரில் ஒரு ஏரியின் அருகே இருந்த ஒரு பிளாஸ்டிக் பையில் எட்டு பெண் சிசுக்களின் சிதைக்கப்பட்ட கருக்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் சாக்கடைகளில் இருந்து பெண் சிசு கருக்கள் கண்டெடுக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள், ”குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்காக, சட்டவிரோதமாக பாலின பரிசோதனை செய்வதும், கருகலைப்பும் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருவதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன” என்று தெரிவிக்கிறார்கள்.

மேலும், “சாங்லி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் பல, பெண் சிசுக்களை கண்டறிந்து கொல்வதையே முழு நேர தொழிலாக வைத்திருக்கின்றன. ஆகவே இந்த விவகாரத்தை கிளறினால் இன்னும் ஏராளமான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும்” என்கின்றனர் உள்ளூர் செய்தியாளர்கள்.