மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது 61% மாதிரிகளில் 61% இருவகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது.  கடந்த ஜனவரி முதல் இருவகை உருமாறிய கொரோனா குறிப்பிட்ட சில நாடுகளில் அதிகம் காணப்பட்டது.  குறிப்பாக இந்த இருவகை உருமாறிய கொரோனா பிரிட்டன், பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்காவில் காணப்பட்டது.    இதையொட்டி இந்நாடுகள் பல கடுமையான நடவடிக்கைகள் எடுத்தன.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலைத் தாக்கம் தொடங்கி உள்ளது.  இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.  இங்குத் தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.   நேற்று வரை 35.19 லட்சம் பாதிப்பு அடைந்து 58,500க்கு மேற்பட்டோர் உயிர் இழந்து 93 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி இங்கு கொரோனா பரிசோதனைகள் மிகவும் தீவிரமாகி உள்ளன.   இவ்வாறு சோதிக்கப்படும் மாதிரிகளில் இருவகை உருமாறிய கொரோனா தொற்றும் காணப்பட்டு வந்தது.  அது சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறதாகச் சொல்லப்படுகிறது.  கடந்த மார்ச் 24 ஆம் தேதி அன்ற் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் மகாராஷ்டிராவில் சோதிக்கப்பட்ட மாதிரிகளில் 15 – 20% இருவகை உருமாறிய கொரோனா உள்ளதாகக் கூறப்பட்டது.

ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று தேசிய தொற்று நோய்த் தடுப்பு அதிகாரிகளிடம் அனைத்து மாவட்ட அரசு சோதனைக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் விவரங்கள் அளிக்கப்பட்டது.  இந்த கூட்டம் மகாராஷ்டிர மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு  இயக்குநரகம் மற்றும் மருந்துகள் துறையினரால் நடத்தப்பட்டது.

அந்த விவரங்களின் மூலம் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  அந்த அறிக்கை எழுத்துப் பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை எனினும் அதில் உள்ள விவரங்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டுள்ளது.  அதில் மகாராஷ்டிர மாநில இரண்டாம் அலை கொரோனா பரவலில் இருவகை உருமாறிய கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது சோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளில் 61% வரை இருவகை உருமாறிய கொரோனா தொற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.    ஆனால் இதை அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில அதிகாரிகள் இது பற்றி தகவல் தெரிவிக்க மறுத்துள்ளனர்.   இவ்வகை பாதிப்பு ஒரு சில மாதிரிகளில் மட்டும் உள்ளதாகவும் இவை டில்லி உள்ளிட்ட வேறு சில நகரங்களிலும் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.