இந்தூர்
தடையை மீறி பிச்சை அளித்தவர் மீது மத்தியப் பிரதேச மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிச்சை எடுப்பதும், பிச்சை கொடுப்பதும் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் எங்கும் இதையொட்டி அரசு பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.
நேற்று இந்தூர் நகரில் உள்ள கோவில் முன்பு பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், பிச்சைக்காரருக்கு 10 ரூபாய் பிச்சை போட்டுள்ளார்.
எனவே பிச்சைக்கார ஒழிப்பு குழு, அடையாளம் தெரியாத வாகன ஓட்டி மீது பிச்சை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. ஏற்கனவே கடந்த ஜனவரி 23-ந் தேதி காண்ட்வா கோவில் பகுதியில் ஒருவர் பிச்சை போட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நேற்று பிச்சை அளித்தவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு இந்த சட்டப்பிரிவின் கீழ் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.