சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர  விண்ணப்பங்கள் கடந்த 6ந்தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 24ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்  மே 6ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.. மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூ.50, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.2 செலுத்த வேண்டும். இணைய வசதி இல்லாதவர்கள், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வாயிலாகவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இணையவழியில் கட்டணம் செலுத்த இயலாதவர்கள், இந்த உதவி மையங்களில் ‘The Director, Directorate of Collegiate Education, Chennai-15’ என்ற பெயரில் வங்கி வரைவோலை மூலமாக வழங்கலாம். உதவி மையங்கள் விவரம், மாணவர் சேர்க்கை கால அட்டவணை ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், 044–24343106 / 24342911 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில்  இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 6ந்தேதி விண்ணப்பதிவு தொடங்கிய நிலையில் மே 10ந்தேதி வரையிலான கடந்த 5 நாளில் மட்டும் இவ்வளவு பேர் விண்ணப்பித்து உள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளன்ர.  விண்ணப்பதிவுக்கான  கடைசி நாள்  மே 20ம் தேதி வரை அவகாசம் இருப்பதால்  மேலும், விண்ணப்ப பதிவு அதிகரிக்கும் எனவும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.