சென்னை: தமிழ்நாட்டில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதை உறுதி செய்யும் வகையில், சென்னை மாநகர காவல்துறையினர் கடந்த 3 நாட்களில் மட்டும் கஞ்சா உள்பட போதை பொருட்களை விற்பனை 334 பேரை கைது செய்துள்ளது.

 சென்னை பெருநகர காவல் எல்லையில் கடந்த 3 நாட்களில் கஞ்சாவுக்கு எதிரான வேட்டையில் கஞ்சா வியாபாரிகள், 58 ரவுடிகள் உள்பட 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில்  அதிகரித்துள்ள போதைபொருள் விற்பனையால் ஏராளமான கொலை, பாலியல் வன்முறைகள் போன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமும் பல முறை மாநில அரசை கண்டித்துள்ளது. கடந்த வாரம்கூட  எல்லா இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது என்று குற்றம் சாட்டிய  சென்னை உயர்நீதி மன்றம் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் கடுமையாக சாடியிருந்தது.

இந்த நிலையில்,  தடையை மீறி போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மேலும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண் போதை தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் தலைமையில் சிறப்பு பிரிவு ஒன்று தொடங்கியுள்ளார்.

இந்த குழுவினர், போதைபொருள் விற்பனை கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் கும்பலை மட்டும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த 6ம் தேதி முதல் 8ம்தேதி வரை வரையிலான 3 நாட்களில் சென்னை மாநகர் முழுவதும்  ‘போதை தடுப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். அதில் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், சென்னையில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்தனர்.

இந்த  அதிரடி நடவடிக்கையில் 3 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தியதாக 58 ரவுடிகள் உள்பட   334 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள்மீது  தனித்தனியாக 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போலீசாரின் தடையை மீறி சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது! சென்னை உயர்நீதி மன்றம்

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை! உயர்நீதி மன்றம் அதிருப்தி…