டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்த நிலையில்,  கடந்த இரு மாதங்களில் மட்டும்  சுமார் ஐந்தரை லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,  மத்திய உள்துறை அமைச்சகத்தின் 100 நாள் சாதனைகள் வெளியிடப்பட்டன.  அதில், பிஎன்எஸ் எனப்படும் பாரதிய நியாய சன்ஹிதா, பிஎன்எஸ்எஸ் எனப்படும் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பிஎஸ்ஏ எனப்படும் பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் மூலம் 5.56 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, பாரதீய நியாய சன்ஹிதா அமலுக்கு வந்த ஜூலை 1-ந்தேதியில் இருந்து கடந்த 3-ந்தேதிவரை அச்சட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 5 லட்சத்து 56 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும், இச்சட்டங்களை சுமுகமாக அமல்படுத்துவதற்காக இ-சாக்ஷ்யா உள்பட பல்வேறு செல்போன் செயலிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும்,  இ-சாக்ஷ்யா செயலி, ஆதாரங்களை பதிவு செய்யவும், சேமித்து வைக்கவும் பயன்படுகிறது.

இந்த புதிய கிரிமினல் சட்டங்களை 22 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. புதிய குற்றவியல் சட்டங்களை படித்து பார்க்க ‘என்சிஆர்பி சங்களன்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 5 லட்சத்து 85 ஆயிரம் தடவை அந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

தனிநபர்களுக்கு அளிப்பதற்காக கோர்ட்டில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு மின்னணு முறையில் சம்மன் அனுப்ப ‘இ-சம்மன்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று முதல் அமலானது 3 புதிய குற்றவியல் சட்டங்கள்…