டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,26,914 ஆக உயர்ந்து 80,808 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 81,911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 49.26,914 ஆகி உள்ளது. நேற்று 1,084 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 80,808 ஆகி உள்ளது. நேற்று 79,202 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 38,56,246 ஆகி உள்ளது. தற்போது 9,89,170 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 17,066 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,77,374 ஆகி உள்ளது நேற்று 363 பேர் உயிர் இழந்து மொத்தம் 29,894 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 15,789 பேர் குணமடைந்து மொத்தம் 7,55,850 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,956 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,75,079 ஆகி உள்ளது இதில் நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 9,764 பேர் குணமடைந்து மொத்தம் 4,76,903 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 5,752 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,08,511 ஆகி உள்ளது இதில் நேற்று 53 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,434 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,799 பேர் குணமடைந்து மொத்தம் 4,53,165 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 8,244 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,67,689 ஆகி உள்ளது இதில் நேற்று 119 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,384 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,865 பேர் குணமடைந்து மொத்தம் 3,61,823 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 5,159 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,17,195 ஆகி உள்ளது இதில் நேற்று 62 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,491 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,932 பேர் குணமடைந்து மொத்தம் 2,45,417 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.