டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,06,507 ஆக உயர்ந்து 1,43,746 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 21,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 99,06,507 ஆகி உள்ளது.  நேற்று 353 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,43,746 ஆகி உள்ளது.  நேற்று 34,313 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 94,21,832 ஆகி உள்ளது.  தற்போது 3,38,362 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,949 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,86,365 ஆகி உள்ளது  நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 48,269 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,610 பேர் குணமடைந்து மொத்தம் 17,61,615 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 72,383 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 830 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,02,240 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,954 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,164 பேர் குணமடைந்து மொத்தம் 8,74,202 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,065 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 305 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,75,836 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,059 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 541 பேர் குணமடைந்து மொத்தம் 8,64,049 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,728 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,141 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,00,029 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,909 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,203 பேர் குணமடைந்து மொத்தம் 7,78,081 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,039 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,707 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,72,038 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,648 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,481 பேர் குணமடைந்து மொத்தம் 5,11,600 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 57,642 பேர் சிகிச்சையில் உள்ளனர்.