டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 31,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 94,63,254 ஆகி உள்ளது.  நேற்று 482 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,37,659 ஆகி உள்ளது.  நேற்று 42,282 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 88,88,595 ஆகி உள்ளது.  தற்போது 4,34,821 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,837 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,23,896 ஆகி உள்ளது  நேற்று 80 பேர் உயிர் இழந்து மொத்தம் 47,151 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,196 பேர் குணமடைந்து மொத்தம் 16,85,122  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 90,557 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 998 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,84,897 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,778 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,209 பேர் குணமடைந்து மொத்தம் 8,49,821 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,279 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 381 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,68,064 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,992 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 934 பேர் குணமடைந்து மொத்தம் 8,53,232 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,840 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,81,915 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,712 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,456 பேர் குணமடைந்து மொத்தம் 7,59,206 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,382 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,02,983 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,245 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,055 பேர் குணமடைந்து மொத்தம் 5,38,713 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 61,907 பேர் சிகிச்சையில் உள்ளனர்.