டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,95,908 ஆக உயர்ந்து 1,33,263 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 45,301 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 90,95,908 ஆகி உள்ளது.  நேற்று 499 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,33,263 ஆகி உள்ளது.  நேற்று 44,055 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 85,20,039 ஆகி உள்ளது.  தற்போது 4,40,554 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,760 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,74,455 ஆகி உள்ளது  நேற்று 62 பேர் உயிர் இழந்து மொத்தம் 46,573 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,088 பேர் குணமடைந்து மொத்தம் 16,47,004  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 79,873 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,781 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,71,342 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,641 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,799 பேர் குணமடைந்து மொத்தம் 8,34,968 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,714 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,1140 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,59,932 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,927 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,765 பேர் குணமடைந்து மொத்தம் 8,39,395 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,770 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,663 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,68,340 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,586 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,133 பேர் குணமடைந்து மொத்தம் 7,43,838 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 12,916 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,772 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,57,442 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,023 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,719 பேர் குணமடைந்து மொத்தம் 4,88,437 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 66,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.