டில்லி
இந்தியாவில் நேற்று 49,701 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,02,32,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,701 அதிகரித்து மொத்தம் 3,02,32,320 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,285 அதிகரித்து மொத்தம் 3,95,780 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 57,481 பேர் குணமாகி இதுவரை 2,92,43,335 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 5,81,337 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 9,812 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 60,26,847 ஆகி உள்ளது நேற்று 511 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,20,881 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,752 பேர் குணமடைந்து மொத்தம் 57,81,551 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,21,251 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 12,118 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,77,990 ஆகி உள்ளது. இதில் நேற்று 118 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,818 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 11,124 பேர் குணமடைந்து மொத்தம் 27,63,616 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,01,110 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,272 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,31,026 ஆகி உள்ளது இதில் நேற்று 115 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,654 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,126 பேர் குணமடைந்து மொத்தம் 26,91,123 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,05,226 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 5,415 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,60,747 ஆகி உள்ளது இதில் நேற்று 148 பேர் உயிர் இழந்து மொத்தம் 32,199 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 7,661 பேர் குணமடைந்து மொத்தம் 23,83,624 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 44,924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 4,147 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,75,622 ஆகி உள்ளது. நேற்று 38 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,566 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,773 பேர் குணமடைந்து மொத்தம் 18,16,930 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 46,126 பேர் சிகிச்சையில் உள்ளனர்.