டில்லி
இந்தியாவில் நேற்று 51,225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,01,33,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,225 அதிகரித்து மொத்தம் 3,01,33,417 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,324 அதிகரித்து மொத்தம் 3,93,338 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 63,674 பேர் குணமாகி இதுவரை 2,91,20,340 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 6,07,903 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 9,844 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 60,07,431 ஆகி உள்ளது நேற்று 556 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,19,859 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 9,371 பேர் குணமடைந்து மொத்தம் 57,62,661 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,21,767 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 12,078 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,54,326 ஆகி உள்ளது. இதில் நேற்று 136 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,582 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 11,469 பேர் குணமடைந்து மொத்தம் 27,41,436 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 99,862 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,379 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,23,444 ஆகி உள்ளது இதில் நேற்று 138 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,425 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 9,768 பேர் குணமடைந்து மொத்தம் 26,78,473 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,10,523 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 6,162 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,49,577 ஆகி உள்ளது இதில் நேற்று 155 பேர் உயிர் இழந்து மொத்தம் 31,901 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 9,046 பேர் குணமடைந்து மொத்தம் 23,67,831 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 49,845 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 4,981 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,67,017 ஆகி உள்ளது. நேற்று 38 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,490 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,464 பேர் குணமடைந்து மொத்தம் 18,04,844 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 51,204 பேர் சிகிச்சையில் உள்ளனர்.