டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,40,496 ஆக உயர்ந்து 90,021 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 80,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 56.40,496 ஆகி உள்ளது.  நேற்று 1,056 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 90,021 ஆகி உள்ளது.  நேற்று 87,081 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 45,81,820 ஆகி உள்ளது.  தற்போது 9,67,848 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 18,390 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,42,770 ஆகி உள்ளது  நேற்று 392 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,407 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,206 பேர் குணமடைந்து மொத்தம் 9,36,554  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,553 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,39,302 ஆகி உள்ளது  இதில் நேற்று 51 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,461 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,555 பேர் குணமடைந்து மொத்தம் 5,62,376 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,337 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,52,674 ஆகி உள்ளது  இதில் நேற்று 76 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,947 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,406 பேர் குணமடைந்து மொத்தம் 4,97,377 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,974 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,33,850 ஆகி உள்ளது  இதில் நேற்று 83 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 8,228 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,073 பேர் குணமடைந்து மொத்தம் 4,32,450 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 5,650 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,64,543 ஆகி உள்ளது  இதில் நேற்று 77 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,212 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,589 பேர் குணமடைந்து மொத்தம் 2,96,183 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.