டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,07,645 ஆக உயர்ந்து 23,727  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 28,178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 9,07,645 ஆகி உள்ளது.  நேற்று 540 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 23,727 ஆகி உள்ளது.  நேற்று 17,683பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,72,112 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,11,422 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 6,497 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,60,924 ஆகி உள்ளது  நேற்று 193 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,482 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,182 பேர் குணமடைந்து மொத்தம் 1,44,507  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,328 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆகி உள்ளது  இதில் நேற்று 66 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,032 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,035 பேர் குணமடைந்து மொத்தம் 92,567 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1,246 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,13,740 ஆகி உள்ளது  இதில் நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,411 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,344 பேர் குணமடைந்து மொத்தம் 91,312 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 902 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 42,808 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,056 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 608 பேர் குணமடைந்து மொத்தம் 29,806 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,738 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 41,581 ஆகி உள்ளது  இதில் நேற்று 73 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 759 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 838 பேர் குணமடைந்து மொத்தம் 16,249 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.