டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,69,052 ஆக உயர்ந்து 21,144  பேர் மரணம் அடைந்துள்ளனர்
 

நேற்று இந்தியாவில் 25,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 7,69,052 ஆகி உள்ளது.  நேற்று 491 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 21,144 ஆகி உள்ளது.  நேற்று 19,509 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,76,554 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,71,254 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 6,603 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,23,724 ஆகி உள்ளது  நேற்று 198 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,448 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,634 பேர் குணமடைந்து மொத்தம் 1,23,192  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 3,756 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆகி உள்ளது  இதில் நேற்று 64 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,700 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,051 பேர் குணமடைந்து மொத்தம் 78,199  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 2,033 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,04,864 ஆகி உள்ளது  இதில் நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,213 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,982 பேர் குணமடைந்து மொத்தம் 78,199 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 783 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 37,419 ஆகி உள்ளது  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,994 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 569 பேர் குணமடைந்து மொத்தம் 27,313 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று 1,188 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 31,156 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 845 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 704 பேர் குணமடைந்து மொத்தம் 20,331 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.