டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,98,609 ஆக உயர்ந்து 5608 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 7761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,98,370 ஆகி உள்ளது. நேற்று 200 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 5608 ஆகி உள்ளது. நேற்று 3899 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 95,754 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,997 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2358 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 70,013 ஆகி உள்ளது நேற்று 76 பேர் உயிர் இழந்து மொத்தம் 2362 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 779 பேர் குணமடைந்து மொத்தம் 30,108 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1162 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,495 ஆகி உள்ளது இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 187 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 413 பேர் குணமடைந்து மொத்தம் 13170 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 990 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,834 ஆகி உள்ளது. நேற்று 50 பேர் மரணம் அடைந்து இதுவரை மொத்தம் 523 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 268 பேர் குணமடைந்து மொத்தம் 8746 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 428 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,217 ஆகி உள்ளது இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 1063 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 268 பேர் குணமடைந்து மொத்தம் 10780 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 269 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,100 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 199 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 181 பேர் குணமடைந்து மொத்தம் 6213 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.