டில்லி

ந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் உலகெங்கும் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது.  இந்த நிலை இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது.  இது கொரோனாவின் இரண்டாம் அலையாக இருக்கலாம் எனக் கூறப்படுவதால் மக்கள் மனதில் கடும் பீதி எழுந்துள்ளது.

அத்துடன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.  இதையொட்டி பல உலக நாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

இன்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் எஸ் கே சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர், “இந்தியாவில் 18 மாநிலங்களில் மொத்தம் 771 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் 736 பேர் இங்கிலாந்து நாட்டு உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தவிர தென் ஆப்ரிக்க உருமாறிய கொரோனாவால் 34 பேரும் பிரேசில் நாட்டு உருமாறிய கொரோனாவால் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.