டெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி உள்ளது.
இந்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,93,802-ஆக உயர்ந்துள்ளது.
அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 475 போ் உயிரிழந்தனா். இதனால் கொரேனாவால் பலியானோர் எண்ணிக்கை 21,604 -ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் தொற்று காரணமாக 2,76,685 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 4,95,513 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .
தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,30,599 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 1,27,259 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,667ஆக உயர்ந்துள்ளது.