காந்திநகர்:
குஜராத் படேல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஹர்திக்படேல், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தார். தேர்தல் முடிவு குறித்து ஹர்திக் படேல் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘ குஜராத்தில் வேலைவாய்ப்பின்மை தோற்றுவிட்டது. கல்வி தோற்றுவிட்டது, விவசாயிகளின் கண்ணீர் தோற்றுவிட்டது. மக்கள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுமே தோற்றுவிட்டன. மக்கள் ஒற்றுமை தோற்று விட்டது.
ஆனால் வாக்குப்பதிவு எந்திரங்கள் வெற்றி பெற்றுவிட்டன. வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும். சூரத், ராஜ்கோட், அகமதாபாத்தில் மின்னணு எந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. பாஜக 100க்கும் குறைவான இடங்களே கிடைத்துள்ளது. இதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி’’ என்றார்.