திருவந்தபுரம்:
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பயணித்த விமானத்திற்குள் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். இதையடுத்த் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி உட்பட எதிர் கட்சிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் கண்ணூரில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அந்த விமானத்திற்குள் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் காங்கிரஸ் மட்டனூர் தலைவர் ஃபர்சின் மஜீத், மாவட்ட செயலாளர் நவீன்குமார் ஆகியோர் விமானத்தில் புகுந்து எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
[youtube-feed feed=1]