சென்னை
முட்டை உற்பத்தி குறைந்துள்ளதால் சென்னை நகரில் ஒரு முட்டை ரூ.7க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நாஅக்க்ல் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் இயங்கி வருகின்றன. இங்கு ஹ்டினமும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகி வந்தது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியபோது எழுந்த அச்சம் காரணமாக, மக்கள் கோழி மற்றும் முட்டை உண்பதை வெகுவாக குறைத்துக் கொண்டனர். இதனால் இவற்றின் விற்பனை வெகுவகம் குறைந்தது.
பல இடங்களில் கோழிகளைக் குறைந்த விலைக்கு விற்றும் வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டது. நாமக்கல் பகுதியில் ஒரு முட்டை மொத்த விலை ரூ1.50 ஆக இறங்கியது. இதையொட்டி கோழிப்பண்ணை உரிமையாளர்கள் அவர்களே ஆட்கள் மூலம் வண்டியில் எடுத்துச் சென்று ஒரு முட்டை ரூ. 2 என தெருத்த்ருவாக விற்பனை செய்தும் விற்பனையில் முன்னேற்றம் இல்லை.
எனவே பண்ணை உரிமையாளர்கள் முட்டை உற்பத்தியை 4 கோடியில் இருந்து 50 லட்சமாகக் குறைத்தனர். தற்போது முட்டை மூலம் கொரோனா பரவாது எனவும் முட்டை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் கூற்னாரகல். அதையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் முட்டையைச் சாப்பிட தொடங்கியதால் முட்டை விற்பனை அதிகரித்தது.
இதையொட்டி முட்டை பற்றாக்குறை காரணமாகப் பண்ணையாளர்கள் தங்கள் விற்பனை விலையை ரூ.5.25 வரை உயர்த்தினர். இதனால் சென்னை நகரில் தற்போது ஒரு முட்டை ரூ.7 என விற்கப்படுகிறது. தற்போது முட்டை உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் நடப்பதாகவும் வரும் நவம்பர் மாத இறுதியில் முட்டை விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் நாமக்கல் கோழிப்பண்ணையாளர் ஒருவர் தெரிவ்த்துளார்.