லண்டன்
வரலாற்றில் முதல் முறையாக நடந்து முடிந்த பிரிட்டன் மக்களவை தேர்தலில் 15 இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பிரிட்டன் நாட்டில் நடந்த மக்களவை தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று பிரிட்டன் பிரதமரானார். பிரிட்டன் நாட்டில் ஆங்கிலேயர் மட்டுமின்றி பல நாட்டு மக்களும் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் வெள்ளையர்கள் அல்லாதவர்கள் ஆவார்கள். இவர்களில் பலர் அந்நாட்டுக் குடியுரிமை பெற்று வாக்களிக்கும் உரிமை உடையவர்கள் ஆவார்கள்.
தற்போதைய தேர்தலில் 650 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 65பேர் வெள்ளையர் அல்லாதவர்கள் ஆவார்கள். இதில் பதினைந்து இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், இது நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் 10 சதவீதத்தைப் பிரதிபலிக்கிறது இது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதல் முறையாகும்.
இதற்கு முந்தைய அவையில் வெள்ளையர் அல்லாத பின்னணியில் இருந்து 52 உறுப்பினர்கள் இருந்தனர், தற்போதுதேர்வான 65 பேரில் இந்திய வம்சாவளியின் 15 உறுப்பினர்கள் தேர்வானார்கள். அங்குள்ள 1.5 மில்லியன் மக்கள் கொண்ட சமூகத்திற்கு ஒரு புதிய சாதனையாகும். இவர்களில் தொழிற்கட்சியைச் சேர்ந்த எட்டு பேரும் கன்சர்வேடிவ் கட்.சியைச் சேர்ந்த ஏழு பேரும் அடங்குவர். கடந்த அவையில் இந்திய வம்சாவளியினர் 12 பேர் இருந்தனர்.
தற்போது முதன்முறையாக ஆண்களை விட அதிகமான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2009 தேர்தலில் இரு வெள்ளையர் அல்லாத பெண்கள் உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர் பத்து ஆண்டுகளில் 37 பெண் உறுப்பினர்கள் உள்ளனர்