பாட்னா:

வெளிமாநிலங்களில் தங்களது சொந்த மாநித்துக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பீகார் மாநில அரசு இலவசமாக அணுறைகளை வழங்கி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொழில்கள் முடங்கி உள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். அவர்களை அந்தந்த மாநில அரசுகள், கொரோனா சோதனை நடத்தி தனிமைப்படுத்துதலில்  வைத்து, 14 நாட்கள் கழித்த பிறகு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு பீகார் மாநில அரசு இலவசமாக  ஆணுறைகளை வழங்கி வருகிறது. இதை பெறும் தொழிலாளர்கள் இது எதற்கு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்துள்ளமாநில அரசு சுகாதாரத்துறை அதிகாரி, ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே தம்பதிகள் இருப்பதால், தேவையற்ற கர்ப்பம் உருவாவதாகவும்,  திட்டமிடப்படாத தேவையற்ற கர்பதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இது ஒரு குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கையே என்று தெரிவித்திருப்பதுடன், இது தொடர்பாக அவர்களுக்கு விளக்கமான அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள இதே கொரோனாதான்  இன்று குடும்பத்தினரிடையே பாசப்பிணைப்பை உருவாக்கி  தம்பதிகள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி, ஏராளமான பெண்கள் கர்ப்பம் தரிக்கவும் காரணமாகி உள்ளது. இதன் காரணமாக உலகமெங்கும் ஏறக்குறைய 11 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறக்கப்போகின்றன என்று தெரிவித்திருப்பது டன், இந்தியாவை பொறுத்தமட்டில், டிசம்பர் மாதத்தில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று தெரிவித்து ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் கவலை தெரிவித்த  உள்ளது.

ஏற்கனவே ஆணுறை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நாடான மலேசியா, கொரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள் முடங்கி உள்ளதால், உலகம் முழுவதும் ஆணுறை தட்டுப்பாடு  ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.