
எர்ணாகுளம்:
கடந்த 17–ந் தேதி கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி அளித்தார். இதையடுத்து கேரள போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியை முடுக்கிவிட்டனர்.
சம்பவத்தில் தொடர்புடை.ய கார் டிரைவர் மார்ட்டின், வடிவேல் சலிம், பிரதீப் ஆகிய மூவரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான புல்சார் சுனி என்ற சுனில்குமார் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சிலமணிநேரத்துக்கு முன் சரணடைந்தார்.
Patrikai.com official YouTube Channel